
Kovilur hallikattu gud decision
புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று செங்கவளநாட்டார்களால் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 725 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இதில் வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்த காளைகளை வீரர்கள் சிறப்பாக தழுவினார். கோவிலூரில் நடந்த வீர விளையாட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இந்தநிலையில், காளைகள் விறுவிறுவென அவிழ்த்து விடப்பட்ட நிலையில், கலப்பின காளையான சிந்து வகையை சேர்ந்த காளையை அவிழ்த்தனர். அதனைப்பார்த்த அறிவிப்பாளர் அருமையான கருத்தை பதிவு செய்ததால் அருமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த காளையை அவிழ்த்தபோது போட்டியின் வர்ணனையாளர் மாடுபிடி வீரர்களிடம், யாரும் இந்த காளையை பிடிக்க வேண்டாம் அது கலப்பின காளை என கூறி வீரர்களை தடுத்தார். அது மட்டுமில்லாமல் அந்த காளையை வளர்த்தவரிடம், சந்தைக்கு போயி நாட்டு மாடு வாங்கி, அழைத்து வாருங்கள் அப்போது தான் வீரர்கள் காளையை அடக்குவார்கள். நாங்களும் பரிசு வழங்குவோம். எனவே இதுபோன்ற காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வராதீர்கள் என அறிவித்தார். அங்கு நடந்த தரமான சம்பவத்தை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement