மொட்டை மாடியில் கோஹ்லி பந்து போட, அனுஷ்கா பேட்டிங் செய்ய... வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!

மொட்டை மாடியில் கோஹ்லி பந்து போட, அனுஷ்கா பேட்டிங் செய்ய... வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!


kohli-play-cricket-with-anushka-sharma

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து,  கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை  கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா ஊரடங்கால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் விராட் கோலி, மனைவி அனுஷ்காவுடன் வீட்டில் முடங்கியுள்ளார்.

anushka sharma

இந்த நிலையில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் வீட்டு மொட்டைமாடியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதில் முதலில் அனுஷ்கா பேட்டிங் செய்ய கோஹ்லி பவுலிங் செய்கிறார். பின்னர் அனுஷ்கா பவுலிங் செய்ய, விராட் கோலி கிளவுஸ் அணிந்து பேட்டிங் செய்கிறார். இதனை பக்கத்தில் வசித்து வரும் ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.