பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல் ராகுல்.! எப்போது திருமணம்.? மணப்பெண் யார் தெரியுமா.?

பிரபல நடிகையை கரம்பிடிக்கும் கே.எல் ராகுல்.! எப்போது திருமணம்.? மணப்பெண் யார் தெரியுமா.?


kl rahul will get marriage famous actress

கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகைகளும் காதல்வசப்படுவது சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளனனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி-யுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.


கே.எல் ராகுலுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையிலான திருமணம் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வருகிற ஜனவரி மாதம் மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் பங்களாவில் வைத்து நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி கே.எல் ராகுல் தனது காதலிக்கு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.