விளையாட்டு

கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டப்போகிறேன்.. பஞ்சாப் அணி புதிய கேப்டன் கேஎல் ராகுல்!

Summary:

Kl rahul reveals plan for ipl2020

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி யூஏஇயில் துவங்கவுள்ளது 2020 ஐபிஎல். இந்த தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளனர்.

கேஎல் ராகுல் இதற்கு முன்னதாக ஒரே ஒருமுறை மட்டுமே இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். முதல்முறையாக இப்போது தான் மிகப்பெரிய தொடருக்கு கேப்டனாக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய அவர், "நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் என்னை நானே கேப்டனாக தான் எண்ணிக்கொள்வேன். அப்போது தான் என்னால் பொறுப்புடன் விளையாட முடிந்தது. எனவே இந்த கேப்டன் பதவி எனக்கு பெரிய சுமையாக இருக்காது.

மேலும் கேப்டனாக மாறுபட்ட திறமைகளை கொண்ட தோனி, ரோகித் சர்மா மற்றும் கோலியின் தலைமையில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. அவர்களிடம் இருந்து பல விஷயங்கள் கற்றுள்ளேன். அதனை இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் பயன்படுத்துவேன்" என கூறியுள்ளார்.


Advertisement