ஏழை குழந்தைகளுக்காக தனது பேட்டை ஏலம் விட்டு பணம் திரட்டும் கே.எல் ராகுல்..! குவியும் வாழ்த்துக்கள்.!

ஏழை குழந்தைகளுக்கு உதவிசெய்யும் வகையில், தான் பயன்படுத்திய பேட், ஜெர்சி போன்றவரை ஏலம் விட இருப்பதாக இந்திய அணியின் அதிரடி வீரர் KL ராகுல் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுக்கே தடுமாறும் சூழல் இருவாகியுள்ளது. இந்நிலையியல், கொரோனாவை தடுக்க அரசுக்கு, ஏழை எளிய மக்களுக்கும் பலரும் நிதி வழங்கியும், உதவிகள் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் பயன்படுத்திய பேட், தனது ஜெர்சி, Pads மற்றும் Gloves போன்றவற்றை ஏலம் விட்டு, அதில்வரும் பணம் மூலம் பாதிக்கப்படக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய இருப்பதாக KL ராகுல் கூறியுள்ளார். ராகுலின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.