விளையாட்டு

கே.எல் ராகுல்.. என்ன இதெல்லாம்..! சிக்சருக்கு சென்ற பந்தைத் தாவி பிடித்து எதிரணியை மிரளவிட்ட சம்பவம்.. வைரல் வீடியோ..

Summary:

இந்தியா - இங்கிலாந்து முதல் T20 போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல் ராகுல் பந்தை தாவி பிடித

இந்தியா - இங்கிலாந்து முதல் T20 போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல் ராகுல் பந்தை தாவி பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 15.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசிய பந்தை ஜாஷ் பட்லர் சிக்சராக மாற்ற முயற்சித்த நிலையில், பட்லர் அடித்த பந்து எல்லைக்கோட்டை தாண்டி சிக்சருக்கு பறந்தது. அப்போது எல்லை கோட்டில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணி வீரர் கே.எல் ராகுல் அந்த பந்தை தாவி பிடித்து பவுண்டரி கோட்டிற்குள் தூக்கி போட்டார்.

இதனால் அந்த பந்து சிக்சருக்கு செல்வது தடுக்கப்பட்டது. இந்நிலையியல் மிகவும் அற்புதமாக தாவி அந்த பந்தை தடுத்த கே.எல்.ராகுலின் இந்த அற்புதமான பீல் காட்சி இணையத்தில் வெளியாகி வைராகிவரும்நிலையில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


Advertisement