புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சென்னை அணியின் தோல்விக்கு தினேஷ் கார்த்தியின் அந்த மாஸ்டர் பிளான்தான் காரணமா? புகழும் பிரபலங்கள்.
தோனியின் ஐடியாவை வைத்து அவரையே சாய்த்துவிட்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சென்னை vs கொல்கத்தா:
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிய லீக் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியின் ஓப்பனிங் நன்றாக அமைந்தாலும், மிடில் ஆர்டர் பேஸ்ட்மேன்களின் சொதப்பலால் சென்னை அணி தோல்வி அடைந்தது.
தினேஷ் கார்த்தியின் மாஸ்டர் பிளான்:
மேலும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடும் மிக முக்கிய காரணமாக அமைந்தது. மிகவும் வித்தியாசமான அணுகுமுறையால் தோனி எப்படி எதிர் அணிகளுக்கு எதிராக வியூகங்களை வகுத்து வெற்றிபெற்றாரோ அதே வியூகத்தை பயன்படுத்தி இன்று தோனி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.
புகழ்ந்துதள்ளிய ஜடேஜா:
முதல் 10 ஓவர் வரை கொல்கத்தா அணியின் நடச்சத்திர பந்துவீச்சாளர் சுனில் நரேனை பந்துவீச செய்யாமல், 10 ஓவருக்கு பிறகு அவரை களமிறக்கி சென்னை அணியை கூடாது காலிசெய்துவிட்டார் தினேஷ் கார்த்திக். கடினமான இல்லக்குகளையும் சுலபமாக கடந்து வெற்றிபெறும் வல்லமை படைத்தது சென்னை அணி. ஆனால் தினேஷ் கார்த்தியின் வியூகத்தால் அதனை உடைத்துள்ளார் என அஜய் ஜடேஜா புகழ்ந்துள்ளார்.
பாராட்டிய சேவாக்:
அதேபோல், ஆட்டத்தை பார்க்கும்போது இது தினேஷ் கார்த்தியின் வியூகமாக இருக்குமோ என சந்தேகித்தான். அதேபோல் 10 ஓவருக்கு பிறகு சுனில் நரேனை இறக்கி அணியை வெற்றிபெற செய்துவிட்டார் தினேஷ் கார்த்திக் என சேவாக் புகழ்ந்துள்ளார்.