வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
100 ஆவது போட்டியில் 100... ஹாட்ரிக் சதமடித்து ஜோ ரூட் சாதனை!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார சதமடித்துள்ளார்.
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் துவங்கியது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டிற்கு 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இன்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 20 ஆவது சதத்தினை விளாசினார். மேலும் இவர் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்தியுள்ளார்.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் 9 ஆவது வீரராக தற்போது ரூட் இருந்து வருகிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறாதது சற்று வருத்தமே.