இறுதிப்போட்டிக்காக இந்திய ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் வைத்த நியூசிலாந்து வீரர்!

இறுதிப்போட்டிக்காக இந்திய ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் வைத்த நியூசிலாந்து வீரர்!


Jimmy neesham requests Indian fans

கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

அரையிறுதிக்கான அணிகள் உறுதியான சமயத்தில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை இந்தியா நிச்சயம் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருந்து வந்தனர். எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டினை இந்திய ரசிகர்கள் அதிகமாக வாங்கியுள்ளனர். ஆனால் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது அரையிறுதிப் போட்டி.

wc2019

30 ஆயிரம் வீரர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியை காண காணும் வாய்ப்பு நியூசிலாந்து ரசிகர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம் அவர்களுக்கு போதுமான டிக்கெட் கிடைக்கவில்லை.

wc2019

எனவே இறுதிப் போட்டியை நேரில் காண விருப்பமில்லாத இந்திய ரசிகர்கள் தயவுசெய்து தாங்கள் வாங்கிய டிக்கெட்டை முறையான அலுவலகத்தில் திருப்பி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம். மேலும் இந்திய ரசிகர்கள் டிக்கெட்டை தவறான முறையில் அதிக விலைக்கு விற்று மற்ற ரசிகர்களை சிரமப்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள பல இந்திய ரசிகர்கள் இறுதிப் போட்டியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் நியூசிலாந்து அணிக்கு முழு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.