3 வது டெஸ்ட் போட்டியில் திடீர் பரபரப்பு!! ரோஹித் அவுட் ஆனா உடனே நடந்த சம்பவம்!! வைரல் வீடியோ இதோ..Jarvo entry in India vs England 3rd test

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடிவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, மிக சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 121 ரன்கள் அடித்தார்.

ind vs eng

தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 215 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்து வெளியேறியபோது இந்திய ஜெர்சி மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டு ஜார்வோ என்ற நபர் பேட்டிங் செய்ய மைதானத்துக்குள் நுழைந்தார்.

கிரிக்கெட் வீரர் போலவே நடை, உடை, பாவனை என க்ரீஸுக்கு முன் பேட்டிங் ஆயத்தமான அவரை போட்டியின் நடுவர்கள் கவனிக்க, உடனே பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அந்த நபரை அப்புறப்படுத்தினர். ஆனால் நான் இங்கிருந்து செல்லமாட்டேன் என அந்த நபர் அடம்பிடிக்கவே, அதிகாரிகள் அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல், 2-வது டெஸ்ட் போட்டியின் போதும் இந்திய அணியின் சீருடையை அணிந்துகொண்டு, இந்திய வீரர்களுடன் சேர்ந்து அந்த நபர் பீல்டிங் செய்ய முற்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.