கேலியாக பேசிய முன்னாள் வீரருக்கு தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் வரவேற்பு

கேலியாக பேசிய முன்னாள் வீரருக்கு தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் வரவேற்பு


Jadeja replies strongly to sanjay manrekar

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ரேக்கர் தன்னை கிண்டல் செய்ததற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இந்திய உலகக்கோப்பை அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தேர்வாகியுள்ளவர் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 7 பேட்டிகளிலும் ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் பீல்டராக அவர் பிடித்த கேட்ச்களை ரசிகர்களால் நிச்சயம் மறக்க முடியாது.

wc2019

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா தோற்ற பிறகு, ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி சஞ்சய் மஞ்ரேக்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்த போது, ‘நான் துண்டு துணுக்கு வீரரின் பெரிய ஆதரவாளன் இல்லை. ரவீந்திர ஜடேஜா 50 ஒவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தன் கிரிக்கெட் கரியரில் இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நல்ல பவுலர்" என்று ஜடேஜாவை தரம் குறைத்து பேசினார் சஞ்சய்.

wc2019

இதற்கு தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஜடேஜா, “நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு போட்டிகளில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். சாதனை புரிந்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! நிறுத்துங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2043 ரன்களும் 74 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1994 ரன்களும் அடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 41 டெஸ்ட் போட்டிகளில் 1485 ரன்கள் 192 விக்கெட்டுகளையும், 151 ஒருநாள் போட்டிகளில் 2035 ரன்கள் 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.