விளையாட்டு

ஐபில்; புள்ளி பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம். எந்த அணி எந்த இடம்! இதோ!

Summary:

IPL points table up to 40th match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்த சென்னை அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோற்றத்தாலும், டெல்லி அணியைவிட ரன் சதவீதத்தில் குறைவாக இருப்பதாலும் முதல் இடத்தை விட்டு இறங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்திலும், 9 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள கைதராபாத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி தொடர் தோல்விகளால் ஆறாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளது. ஏழாவது இடத்தில் ராஜஸ்தான் அணியும், 8 வது இடத்தில் பெங்களூர் அணியும் உள்ளது.

முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.


Advertisement