ஐபிஎல் ஏலம் 2020 .. எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியால் வாங்கப்பட்டனர்! வெளியான முழுவிவரங்கள்!

ஐபிஎல் ஏலம் 2020 .. எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியால் வாங்கப்பட்டனர்! வெளியான முழுவிவரங்கள்!


ipl-players-auction-for-2020

ஐபிஎல் டி20 கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கும் ஒன்றாகும். இந்த  போட்டியின் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.மேலும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் இந்த  ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று தொடங்கியது.

146 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 332 வீரா்கள் ஏலம் எடுக்கும் பட்டியலில் உள்ளனர். இதில் 73 வீரா்களை 8 அணிகள் தோ்வு செய்யவேண்டும். மேலும் சென்னை சூப்பா் கிங்ஸிடம்  வீரா்களை ஏழாம் எடுக்க ரூ.14.60 கோடியும், தில்லி கேப்பிடல்ஸ் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம்  ரூ.42.70 கோடியும் வைத்திருந்தது. மேலு கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.35.65 கோடி, மும்பை இந்தியன்ஸிடம் ரூ.13.05 கோடி ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரூ.28.90 கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸிடம் ரூ.27.90 கோடி, சன்ரைசா்ஸ் ஹைதராபாத்திடம் ரூ.17 கோடியும் இருந்தது.

Ipl 2020

ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின்னை மும்பை அணி ரூ. 2 கோடிக்கு  ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து  ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்கு ராஜஸ்தான் அணியும்இங்கிலாந்து அணியின் இயன் மார்க்னை 5.25 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், , இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரனை ரூ.5.50 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

மேலும் பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.கோல்ட்டர் நைல் மும்பை அணியால் 8 கோடிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் மேற்கிந்திய தீவுகள் அணியின் காட்ரெல் பஞ்சாப் அணியால் 8.5 கோடிக்கும், சென்னை அணி பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளனர்.