விளையாட்டு

ஐபில்: இந்த சாதனையில் தோணிதான் இரண்டாவது இடம்! என்ன சாதனை தெரியுமா?

Summary:

IPL most sixses csk dhoni in second place

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 21 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அணைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை நடந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோணி இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

https://cdn.tamilspark.com/media/18144val-MS-Dhoni-Suresh-Raina-CSK-AFP-social.jpg

இந்நிலையில் IPL போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோணி செய்துள்ள சாதனை ஓன்று வைரலாகிவருகிறது. பொதுவாக IPL என்றாலே சிக்ஸர், பவுண்டரிக்குத்தான் மவுசு அதிகம்.

அந்த வகையில் இதுவரை நடைபெற்ற IPL போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தல தோனிதான் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பஞ்சாப் அணி வீரர் க்ரிஷ் கெய்ல் உள்ளார்.

https://cdn.tamilspark.com/media/18144val-dhoni-ipl-m.jpg

மொத்தம் 113 போட்டிகளில் 298 சிக்சருடன் கெய்ல் முதல் இடத்திலும், 159 போட்டிகளில் 187 சிக்சருடன் தோணி இரண்டாம் இடத்திலும் உள்ளார். பெங்களூர் அணி வீரர் டீ வில்லியர்ஸ் 130 போட்டிகளில் 186 சிக்சருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.


Advertisement