பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
அஸ்வின்- பட்லர் சர்ச்சை அவுட் குறித்து ராகுல் டிராவிட் என்ன சொன்னார் தெரியுமா?
அஸ்வின்- பட்லர் சர்ச்சை அவுட் குறித்து ராகுல் டிராவிட் என்ன சொன்னார் தெரியுமா?

ஐபில் போட்டியின் 12 வது சீசனில் நேற்று முன்தினம் நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதியது.
இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 184 ஓட்டங்கள் பெற்றுது. அதன் பிறகு ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 69 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
ராஜஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டி விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வித்தியாசமான முறையில் பட்லரை அவுட் செய்து வெளியே அனுப்பினார் அஸ்வின். அதாவது, அஸ்வின் பந்து எரிவதற்கு முன்பே நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த பட்லர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தார்.
இந்த மான்கட் முறை கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டது என்றாலும், இந்த முறையில் பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது முழுதும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என கருதப்படுகிறது.
இந்த முறையில் ஒருவீரரை அவுட்டாக்கினாலும் அந்த அணியின் கேப்டன் விக்கெட் கைப்பற்ற விரும்பவில்லை என கருதினால், பேட்ஸ்மேன் நாட் அவுட் என அறிவிக்கப்படுவார்கள். ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் என்பதால், அந்த முறைக்கும் பட்லருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிராவிட் கூறுகையில், ‘கிரிக்கெட் என்பது ஜெண்டில் மேன் விளையாட்டு. ஜாஸ் பட்லரை அஷ்வின் அவுட்டாக்கிய முறை கிரிக்கெட் விதிமுறையில் இருந்தாலும், என்னைப்பொறுத்தவரையில் அது முழுதும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது. அதனால் முதலில் வார்னிங் கொடுத்திருக்க வேண்டியது அவசியமானது. அதை அஷ்வின் செய்யாதது ஏமாற்றம் தான்.’ என்றார்.