
ipl 4th leek - rajastan rayals - kings leven punjab match
ஐபிஎல் போட்டி தொடரின் 12வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இதன்படி முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் மற்றும் சர்ப்ராஸ் கான் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து சிறப்பாக விளையாடியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க மட்டையாளர்களான அஜிங்கியா ரஹானேவும் ஜாஸ் பட்லரும் சிறப்பாக விளையாடினர். அதிலும் பட்டலர் அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
இந்நிலையில் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது 13ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அப்பொழுது பந்து வீசுவதற்கு முன்பே தந்திரமாக கிரீஸை விட்டு வெளியே நின்ற பட்லரை திடீரென ரன் அவுட் செய்து நடுவரிடம் முறையிட்டார். இதனால் நடுவர் மூன்றாவது நடுவரிடம் முறையிட இறுதியாக பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் மட்டையை வீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் அந்த அணி பரிதாபமாக தோற்றது. சிறப்பாக ஆடி வந்த பட்லரை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாகி வெளியேற்றிய அஸ்வின் செயல் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement