விளையாட்டு

பிசிசிஐ மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Summary:

IPL-2020-One-member-of-BCCI-medical-team-tests-positive.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமானதை அடுத்து ஐபிஎல் கிரிக்கெட் பேட்டிகள் நடைப்பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உட்பட 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று ஏற்ப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

 

    


Advertisement