அந்த யுக்தியை தோனியை விட சிறப்பாக கையாண்ட எந்த கேப்டனையும் நான் பார்க்கவில்லை- சின்னத் தல ரெய்னா.!

அந்த யுக்தியை தோனியை விட சிறப்பாக கையாண்ட எந்த கேப்டனையும் நான் பார்க்கவில்லை- சின்னத் தல ரெய்னா.!


ipl-2019-suresh-raina-speech---captain-msdhoni

ஐபிஎல் சீசன் 12 மார்ச் 23 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. பரபரப்பான முதல் ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதின. இப்போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் வெற்றிக்கான 71 ரன்களை 17.4 ஓவர்களில் தான் பெற்றது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு சலிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியானது டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நேற்று நடைபெற்றது. டெல்லியை தாக்குப்பிடிக்குமா சிஎஸ்கே என்ற அனைவரின் எதிர்பார்ப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது அனுபவ பந்துவீச்சின் மூலமாக டெல்லி அணியை 147 ரன்களோடு கட்டுப்படுத்தியது.

IPL 2019

அதன்பிறகு ஆடவந்த சிஎஸ்கே வீரர்கள் வழக்கமான ஆட்டத்தை விட ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அதிரடியாகவே ரன்களை குவித்தனர். ஷேன் வாட்சன் 44 (26) சுரேஷ் ரெய்னா 30 (16) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இறுதியாக அந்த அணி வெற்றி பெற 8 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் வழக்கம் போல கூலாக செயல்பட்ட கேப்டன் தோனி, சிக்சருக்கு அனுப்ப, அந்த அணியின் வெற்றி உறுதியானது.

IPL 2019 

இதுதொடர்பாக ரெய்னா கூறுகையில், ‘ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. போட்டியில் வெல்ல அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து அணியை வெற்றி பெற வைப்பார்கள். ஆனால் தோனியை பொறுத்த வரையில் ஒவ்வொரு போட்டியின் தன்மைக்கு ஏற்ப, அவர் பிளான் செய்யும் திறமை தான் சிறப்பு. இதுவரை அந்த யுக்தியை தோனியை விட சிறப்பாக கையாண்ட எந்த கேப்டனையும் நான் பார்க்கவில்லை.’ என்றார்.