வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
ஐபில் 2019: புள்ளி பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்? இதோ!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 42 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 12 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. கைதராபாத் அணி நான்காம் இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிவந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் அடுத்தடுத்த தோல்வியால் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது.
இதுவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூர் அணி நேற்றைய வெற்றியின்மூலம் 8 புள்ளிகள் பெற்று 7 ஆம் இடத்திலும், மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்திலும் உள்ளது.