விளையாட்டு

10 போட்டிகளில் முடியாததை நேற்று முடித்து காட்டிய பெங்களூர் அணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

IPL 2019 Bengalore got 7th place after 11 matches

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 42 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. நேற்று நடந்த பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்து. பெங்களூர் அணியின் சார்பாக டீ வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன் எடுத்தார். 202 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது.

பஞ்சாப் அணியின் வீரர் பூரன் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 46 ரன் எடுத்து பெங்களூர் அணிக்கு சவாலாக அமைந்தார். ஒருவழியாக பஞ்சாப் அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்ததன் மூலம் பெங்களூர் அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

10 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி மூன்று போட்டிகள் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்திலையே இருந்துவந்தது. நேற்று நடந்த 11 வது ஆட்டத்தில் வெற்றிபெற்றதன்மூலம் 10 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது பெங்களூர் அணி.


Advertisement