இந்தியா விளையாட்டு

ரிஷப் பண்டின் மின்னல் வேகத்தை சமாளிக்குமா தல தோனியின் சிஎஸ்கே; மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

ipl 2019 5th leek match - csk & delhi capitl - today 8 pm

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 11 சீசன் நிறைவடைந்து தற்போது 12 வது சீசன் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 5வது போட்டியாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸும் டெல்லி கேப்பிடல் அணியும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.

இரு அணிகளும் கடந்த போட்டிகளின் மூலம் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. 
இந்த வெற்றி அடிப்படையில் பார்த்தால் வெற்றி வித்தியாசம் மிக மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி இலக்கான 70 ரன்களை 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்து. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு பெரும் சலிப்பை ஏற்படுத்தியது.

அதேவேளையில் டெல்லி கேப்பிடல் அணியின் வெற்றி குறித்து பார்த்தால் அந்த அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. அதிலும் வெற்றி இலக்காக 213 ரன்களை நிர்ணயித்திருந்தது. குறிப்பாக அந்த அணியின் இளம் மட்டையாளர் ரிஷப் பண்ட் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார். மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடித்திருந்தார்.

இதனால் இளம் சிங்கங்கள் அடங்கிய டெல்லி கேப்பிடல் அணியை தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் சமாளிக்குமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Advertisement