என்னதா இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களை போல வருமா; டிவிலியர்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?



ipl 2019 - rcb - diviliers - csk fans- example

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 11 சீசன் நிறைவுற்ற ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதனால் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. கடந்த 11 ஆவது லீக்கில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடும்போது அந்த அணி வீரர்கள் இருவரும் சதம் அடித்து புதிய சாதனை படைத்தனர்.

IPL 2019

இப்போட்டியில் பெங்களூரு அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. திறமையான வீரர்களை உள்ளடக்கிய பெங்களூரு அணியின் தோல்வி தொடர்ந்து வருகிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த அணியின் வீரர் டிவில்லியர்ஸ் இதுகுறித்து பேசும்போது:

ஹைதராபாத் தோல்விக்கு பின் பஸ்சில் சென்ற போது கோலியும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பேசிக்கொள்வதற்கு எதுவுமில்லை. கடந்த ஆண்டைவிட பெங்களூரு அணி சிறப்பாகவே உள்ளது. இருந்தாலும் தோல்வியடைகிறோம்.

IPL 2019 

ஆனால் இதற்காக ரசிகர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆண்டு வரலாறு மீண்டும் வந்துவிடுமோ என ரசிகர்கள் பெரிதும் கவலைப்படுவது புரிகிறது. முதலில் பெங்களூரு அணி மீது ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கை தான் அடுத்த இடத்துக்கு கொண்டு செல்லும். அதற்கு மிகச்சிறந்ந்த எடுத்துக்காட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.’ என்றார்.