அடுத்தடுத்து விலகும் சிஎஸ்கே வீரர்கள்; சென்னை அணிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்.!
இந்தியன் பிரீமியர் லீக் 12வது சீசன் தொடங்கி உள்ளது. கடந்த வருடம் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு 3 ஆவது முறையாக கோப்பையை வென்று 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற2ஆவது அணி என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் முதல் போட்டியில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியிலும் டெல்லி கேப்பிடல் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து சிஎஸ்கே நாளை சென்னையில் நடக்கும் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் சென்னை அணி நாளை நடக்கும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர் டேவிட் வில்லேவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால், அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் நிகிதி விலகிய நிலையில், மற்றொரு வீரர் விலகியருப்பது சென்னை அணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.