வீரர்களை ஏன் திட்டினேன் தெரியுமா? விளக்கிய தினேஷ் கார்த்திக்; அட இதுகூட நல்லா இருக்கே.!

வீரர்களை ஏன் திட்டினேன் தெரியுமா? விளக்கிய தினேஷ் கார்த்திக்; அட இதுகூட நல்லா இருக்கே.!


ipl 2019 - 52nd leek - kkr vs kxip - d.karthick

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 52 போட்டிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை, டெல்லி, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. நான்காவது இடத்தை பிடிக்கும் முனைப்பில் ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடந்த 52 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வின் செய்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார்.

IPL 2019

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெயில் (14), ராகுல் (2) ஏமாற்றினர். தொடர்ந்து வந்த மாயங்க் அகர்வால் (36), பூரன் (48) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷாம் கரண் (55*) அரைசதம் அடித்து அசத்த, பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. 

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. இப்போட்டியில் அதிரடியில் மிரட்டிய கொல்கத்தா வீரர் சுப்மான் கில், 49 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 65 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து நேற்றைய ஸ்டாராக ஜொலித்தார்.

IPL 2019

நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணியின் பந்துவீச்சு இடையே அந்த அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலர்கள் மற்றும் தடுப்பாளர்கள் இடையே உரையாற்றும்போது மிகவும் கோபமாக வீரர்களை திட்டும் தோணியில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக்கிடம் அது குறித்து கேட்கப்பட்டது. 

அப்போது பேசிய அவர், ஆமாம் வீரர்களை திட்டியது உண்மைதான். ஏனெனில் சில சமயங்களில் வெற்றிக்கு கோபமும் அவசியமாகிறது. அந்த சமயத்தில் வீரர்களின் செயல்பாடு கொஞ்சம் திருப்தி இல்லாமல் இருந்தது. வீரர்களிடம் உள்ள திறமைகளை முழுவதுமாக வெளிக்கொணர்ந்து அணி நல்ல முடிவை எட்ட கோபம் அவசியமான ஒன்றுதான் என்று தெரிவித்தார்.