மும்பையை மலைக்க வைத்த ரஸ்ஸல்; கொல்கத்தாவை கதிகலங்க வைத்த பாண்டியா; சபாஷ் சரியான போட்டி.!

மும்பையை மலைக்க வைத்த ரஸ்ஸல்; கொல்கத்தாவை கதிகலங்க வைத்த பாண்டியா; சபாஷ் சரியான போட்டி.!


ipl-2019---47th-match---mi-vs-kkr---won-kkr

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லி அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த 47வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில், கிறிஸ் லின் அதிரடி துவக்கம் அளித்தனர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பவுண்டரி அடித்தனர். கிறிஸ் லின் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

IPL 2019

ஷுப்மன் கில் 45 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆண்ரே ரசல் அதிரடியில் மிரட்டி மும்பை அணியை மலைக்க வைத்தார். 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 80 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெடுக்கு 232 ரன்கள் எடுத்தது.

அடுத்து இமாலய இலக்கை துரத்த வந்தது மும்பை. அந்த அணியின் துவக்க வீரர் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் 12, ஈவான் லீவிஸ் 15, சூர்யகுமார் 26, பொல்லார்டு 20 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

IPL 2019 

இதனால் மும்பை அணி தோல்வியை தழுவுவது உறுதியாகிவிட்டது என்று அனைவரும் எண்ணிய நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். நாலாபுறமும் சிக்ஸர் மழை பொழிந்த அவர் ரசலின் அதிரடியை  மிஞ்சும் அளவுக்கு கொல்கத்தா அணியை கதிகலங்க வைத்தார்.

மும்பை அணியை வெற்றியின் அருகில் கொண்டு வந்த  பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 9 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். அதன்பிறகு களமிறங்கிய மட்டையாளர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.