'பேட்பாய்' ரஸ்ஸலின் ரனகளத்தை சமாளிக்குமா ரகானேவின் ராஜஸ்தான் அணி.!

'பேட்பாய்' ரஸ்ஸலின் ரனகளத்தை சமாளிக்குமா ரகானேவின் ராஜஸ்தான் அணி.!


ipl-2019---21th-leek---rr-vs-kkr---rahane---russel

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 19 போட்டிகள் முடிவு பெற்றுள்ளது. அணைத்து அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் இன்று 21 ஆவது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. கொல்கத்தா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

IPL 2019

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், பட்லர், சாம்சன் நம்பிக்கை அளிக்கின்றனர். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கியுள்ள அந்த அணியின் ஸ்மித் தனது பழைய பார்முக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை தொடரலாம். 

கொல்கத்தா அணியை, பொறுத்த வரையில், ரசல் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளார். கடைசி நேரத்தில் போட்டியில் தலையெழுத்தை மாற்றிவிடுகிறார். குறிப்பாக கடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி இலக்கான 206 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, அசுர வேகத்தில் ஆண்ரு ரசல், 13 பந்தில், 1 பவுண்டரி, 7 சிக்சர் என 48 ரன்கள்  சேர்த்தார். இன்றும் இவர் தனது அதிரடியை தொடரலாம்.

IPL 2019 

இதனால் இன்றைய போட்டியில் ரசலின் ரனளத்தை சமாளித்து ராஜஸ்தான் அணி எப்படி வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.