
Inzamam ul Haq support to virat
70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும் என்று விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் இந்திய அணித்தின் பேட்டிங் சொதப்பல் தான் காரணம் என்று கேப்டன் விராட் கோலியே ஒப்புக்கொண்டார். டி20, ஒருநாள், டெஸ்ட் என மொத்தமாக 11 இன்னிங்சில் விளையாடிய விராட் ஒன்றில் மட்டுமே அரைசதம் அடித்தார்.
குறிப்பாக டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்சில் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். விராட் கோலிக்கு இன்-ஸ்விங் பந்தை சரியாக எதிர்கொள்ள தெரியவில்லை என டெக்னிக் குறித்து விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மீதான இந்த விமர்சனம் குறித்து கடுப்பான பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.
இன்சமாம் உல் ஹக் கூறுகையில், "நான் அவருக்கு சொல்லும் ஆலோசனை ஏதாவது இருந்தால், அது கவலைப்பட வேண்டாம் என்பதுதான்". கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்தபின் அவரது டெக்னிக் குறித்து கேள்வியெழுப்ப முடியாது. பெரிய வீரர் வலிமையான மனநிலையை பெற்றிருப்பார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும். விராட் கோலி பழைய நிலைக்கு திரும்புவார் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement