கதறி அழுத சிறுவன்; தலையில் அடித்துக்கொண்ட தோனியின் மனைவி! கண்கலங்க வைக்கும் வீடியோ

கதறி அழுத சிறுவன்; தலையில் அடித்துக்கொண்ட தோனியின் மனைவி! கண்கலங்க வைக்கும் வீடியோ


Indians fans reaction after lose

இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதப் போகிறது என்று தெரிந்தவுடனேயே வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியை காண ஆயத்தம் ஆகிவிட்டனர் ஒட்டுமொத்த ரசிகர்களும். இதற்கு காரணம் இந்தியா எப்படியும் நியூசிலலலாந்தை வென்று விடும் என்ற நம்பிக்கை தான். 

ஆனால் இரண்டு நாட்கள் காக்க வைத்து இப்படி ஏமாற்றுவார்கள் என யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். உலகக்கோப்பையை வெல்ல இதைவிட ஒரு சரியான அணி வேண்டுமா என்ற கோபமும் ரசிகர்கள் மனதில் உள்ளது. 

wc2019

இதனால் தான் என்னவோ ஆட்டம் முடிந்த பிறகும் மைதானத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே சிறிது நேரம் இருந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர் ரசிகர்கள். குறிப்பாக ஒரு சிறுவன் அழும் காட்சி கண்ணுக்குள் நிற்கிறது. 

தோனி மீது அனைத்து ரசிகர்களைப் போலவே அவரது மனைவியும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் தோனி ரன் அவுட் ஆனதும் அவர் தலையில் அடித்துக்கொண்ட காட்சி மிகவும் கொடுமையான ஒன்று. இதையெல்லாம் பாருங்கள்.