இன்றைய வெற்றி மூலம் பத்து ஆண்டு கழித்து மீண்டும் சாதனை படைத்த இந்திய அணி!

இன்றைய வெற்றி மூலம் பத்து ஆண்டு கழித்து மீண்டும் சாதனை படைத்த இந்திய அணி!


indian-cricket-team-won-series-after-10-years

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ச்சியாக வெற்றிபெற்ற வருகிறது. ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது. அதன்பின்னர் நடந்த ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்து நியூசிலாந்து சென்ற இந்திய 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்றுநடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

India vs NZ

2009ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் 3-1 என ஒருநாள் தொடரை வென்றது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றுள்ளது.