முதலாவது போட்டியிலேயே மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா! இந்திய அணி அபார வெற்றி!

முதலாவது போட்டியிலேயே மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா! இந்திய அணி அபார வெற்றி!



india-won-in-first-test-by-31-runs

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். 

First test

அதனைத்தொடரந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி  235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹெட் மட்டும் அரைசதம் அடித்து அதிகபட்சமாக 72 நாட்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் சமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

First test

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் விஜய் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்தனர். அதன்பின் விஜய் 18 ரன்களிலும் ராகுல் 44 ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கோலி நிதானமாக ஆடினர். 

ஆனால் கோலி 34 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ரஹானே 70 ரன்களும் மற்றும் புஜாரா 71 ரன்கள், பண்ட் 28 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

First test

372 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. 

பின்னர் இன்று துவங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் ஷான் மார்ஷ், 41 ரன்கள் எடுத்த கேப்டன் பெயின் மற்றும் 28 ரன்கள் எடுத்த கம்மின்ஸ் விக்கெட்டுகளை பும்ரா தனது வேகத்தில் வீழ்த்தினார். மேலும் சமி, அஸ்வின், இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியா அணி 291 ரன்கள் மட்டும் எடுத்து அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் இந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

First test

இந்திய அணி சார்பில் பும்ரா, சமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற என்று முன்னிலை பெற்றுள்ளது.