"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு தண்ணிகாட்டிய இந்திய அணி.!
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டம் துவங்கியபோது மழை பெய்ததால் போட்டி 12 ஒவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது.
இதனையடுத்து 12 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே அதிரடி காட்டியது. தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 47 ரன்களும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதானையடுத்து இறுதியில் 9.2 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.