காமன்வெல்த்: பார்படாஸ் அணியை அசால்டாக பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி..!

காமன்வெல்த்: பார்படாஸ் அணியை அசால்டாக பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி..!


India women's team qualified semi in commenwealth

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பார்படாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோட்ரிகஸ் 56, சபாலி வர்மா 43 ரன்களை விளாசினர்.

Commenwealth cricket

தொடர்ந்து களமிறங்கிய பார்படாஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 62 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.