சென்னையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி! இன்றைய தினமே சேப்பாக்கத்தில் அலைமோதும் ரசிகர்கள்!

சென்னையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி! இன்றைய தினமே சேப்பாக்கத்தில் அலைமோதும் ரசிகர்கள்!


india vs west indies match in chennai


வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையே மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு துவங்கி பகல்-இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது.

சேப்பாக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் ஒருநாள் போட்டி என்பதாலும், விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது, இன்று காலை 10.30 மணி முதல் டிக்கெட் விற்பனை துவங்கியிருக்கிறது. 

india vs west indies

குறைந்தபட்ச விலையாக ரூ.1200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.2400 ரூ.4000,ரூ.4800,ரூ.6600 மற்றும் ரூ.8000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்ச விலையாக ரூ.12,000 இருக்கின்றது. மேலும், டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.com என்ற இணையதளத்திலும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.