மீண்டும் புதிய சாதனையை நோக்கி ரோஹித்; வாழ்வா..? சாவா..? வெல்லப் போவது யார்?

india vs newziland 3rd T20 match


india-vs-newziland-3rd-t20-match

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதன் பிறகு தொடங்கிய T20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

India vs NZ

இந்நிலையில் இரு அணிகளும் 1-1 என்று சம நிலையில் உள்ள நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி ஆனது ஹாமில்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் தொடங்க உள்ளது.

2 வது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும்பங்கு வகித்த கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

India vs NZ

சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: 

2288 ரோகித் சர்மா 
2272 கப்டில் 
2263 சோயிப் மாலிக் 
2167 விராட் கோலி
2140 பிரண்டன் மெக்கலம் 

இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்த அரிதான வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச T20 அரங்கில் இதுவரை 102 சிக்சர்களை விளாசியுள்ள ரோஹித் இன்றைய போட்டியில் கூடுதலாக 2 சிக்சர்களை விளாசினால் உலக சாதனையாக கருதப்படும்.

டி-20 அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்: 
கிறிஸ் கெயில்/ கப்டில் 103
ரோகித் சர்மா -102
பிரண்டன் மெக்கலம் - 91
முன்ரோ - 87
ஷேன் வாட்சன் - 83