இந்தியா வெற்றி! புயலாக கிளம்பிய நியூஸியை புஷ்வானமாக்கிய இந்திய வீரர்கள்.!

இந்தியா வெற்றி! புயலாக கிளம்பிய நியூஸியை புஷ்வானமாக்கிய இந்திய வீரர்கள்.!



india-vs-newziland-2nd-t20-match

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கடந்த போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ind vs nz 2nd t20

புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார் சேஃபெர்ட்.  இதையடுத்து குருணல் பாண்டியா வீசிய 6வது ஓவரின் இரண்டாவது பந்தில் முன்ரோவையும் கடைசி பந்தில் மிட்செலையும் வீழ்த்தினார் குருணல். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 7வது ஓவரை சாஹல் வீச, மீண்டும் 8வது ஓவரை வீசிய குருணல் பாண்டியா, அந்த ஓவரின் 5வது பந்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை வீழ்த்தினார். 17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வில்லியம்சன் வெளியேறினார்.

ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 60 ரன்களே எடுத்திருந்தது. குருனல் பாண்டிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ind vs nz 2nd t20

ஆனால் அடுத்து டெய்லருடன் ஜோடி சேர்ந்த கிராண்ட்கோம் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். சிக்சரும், புண்டரிகளும் பறந்ததுடன் அணியின் எண்ணிக்கையும் உயர துவங்கியது. சிறப்பாக ஆடிய கிராண்ட்கோம் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

 தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், பொறுப்புடன் ஆடினார். 

ind vs nz 2nd t20

பொறுமையாக ஆடிவந்த தவான், 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப்புடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த விஜய் சங்கர், 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து ரிஷப்புடன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதோடு, இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தது. 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய குருணல் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.