விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா; தோல்வியை தவிர்க்க போராட்டம்.!

விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா; தோல்வியை தவிர்க்க போராட்டம்.!


india vs newziland 1st T20 match

இன்று நடக்கும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக அந்த அணி டிம் செபர்ட் மற்றும் காலின் மன்றோ இருவரும் களம் இறங்கினார்கள். ஒருநாள் தொடரை இழந்த நிலையில் T20 தொடரையாவது வென்றாக வேண்டும் என்று முடிவெடுத்த அந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. அதனால் அவர்களது விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியினர் மிகவும் சிரமப்பட்டனர்.

India vs NZ

ஒரு வழியாக காலின் மன்றோ 34(20) ரன்களில் 8.2 ஆவது ஓவரை வீசிய கிருனாள் பாண்டியா பந்துவீச்சில் ஷங்கரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிஸ்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசிய  டிம் செபர்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலீல் அஹமது பந்துவீச்சு 
84(43) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தாலும் ரன்களை குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்துள்ளது.

India vs NZ

220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை இழந்த வண்ணம் உள்ளனர். முடிவில் இந்திய அணி 11 ஓவர்களில் 77 ரன்களுக்கு  6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.