இந்தியா விளையாட்டு

இந்திய அணியின் வெற்றி தொடருமா? நியூ.எதிரான 2வது போட்டியில் இந்தியா பேட்டிங்

Summary:

india vs newsiland 2nd ODI match at newsiland

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வின் செய்து பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே  நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், சாண்டனருக்கு பதில் சோதி சேர்க்கப்பட்டார். சவுத்திக்கு பதிலாக கிராண்ட்ஹோமே அணியில் இடம் பெற்றுள்ளார். 

முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

இதன்படி இந்திய அணிக்கு துவக்க மட்டையாளர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும்  ஷிகர் தவானும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவில் இந்திய அணி 
8 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்துள்ளது. 


Advertisement