ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
400 கும் மேல போயிருக்கவேண்டிய ரன்..!! ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி..
மூன்றாவது ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிவரும் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளும் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை வெல்லும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா - தவான் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அதிரடியாக விளையாடினர். பின்னர் ரோஹித் ஷர்மா 37 ரன்களிலும், தவான் 67 ரன்களிலும் ரஷீத் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் விராட்கோலி 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் கே.எல், பண்ட் இருவரும் நிதானமாக விளையாட, கே.எல் ராகுல் 18 பந்துகளில் 7 ரன் மட்டும் அடித்து ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனை அடுத்து பண்ட், ஹர்டிக் பாண்டியா இருவரும் கூட்டணி சேர்ந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர்.
ஒருகட்டத்தில் இந்திய அணி 400 ரன்களை கடந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சாம் கரண் வீசிய பந்தியில் பண்ட் 78 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் குறைய தொடங்கியது. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரதால் தாகூர் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 48 . 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம் 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீரர்கள் இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்க உள்ளனர்.