வாவ்.. செம ஸ்கோர்...! பேட்டிங்கை முடித்து இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி.. வெல்லுமா இங்கிலாந்து அணி..?India vs England 2nd odi match update

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் அடித்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தநிலையில், இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ரோஹித் ஷர்மா, தவான் இருவரும் ஓப்பனிங் இறங்கியநிலையில், தவான் 4 ரன்களுக்கும், ரோஹித் ஷர்மா 25 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

ind vs eng

இதனை அடுத்து KL ராகுலுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் விராட்கோலி மிக சிறப்பாக விளையாடியநிலையில், விராட்கோலி 66 ரன்களிலும், KL ராகுல் 108 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களை அடித்து இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 7 சிக்ஸ்ர், 3 பவுண்டரி அடித்து 77 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்துள்ளது. 337 என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி இன்னும் சிறிது நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.