புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த ஆட்டத்தை நிறுத்திய மோடி!!
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடர் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து பிப்ரவரி 6ஆம் தேதி முதல் டி-20 போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூரில் இரண்டாவது டி-20 போட்டி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதே நாளில் பெங்களூருவில் நடைபெறும் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டி 24ம் தேதி பெங்களூருவில் நடப்பதற்கு பதிலாக 27ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.