இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை வரலாறு! இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?

இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை வரலாறு! இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?


india vs austrelia match


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 12 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நியூசிலாந்து 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி மூன்று ஆட்டங்கள் ஆடிய நிலையில் நான்கு புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டு ஆட்டங்கள் ஆடிய நிலையில் நான்கு புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்தநிலையில் உலக கோப்பையின் 13-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இன்றைய போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவரும் ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.  தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைக்கும் முனைப்பில் இந்தியா 

india vs austrelia

இதுவரையில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இதில் ஆஸ்திரேலிய அணி 77 போட்டிகளிலும், இந்திய அணி 49 போட்டிகளிலும், வென்றுள்ளது. உலக கோப்பை அரங்கில் இதுவரை இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் 11 ஆட்டங்கள் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 3 முறையும், ஆஸ்திரேலிய அணி  8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் ஓவலில் மாலை வரை வானம் மேகமூட்டம், வெயில் என மாறி மாறி காணப்படும். மழை வருவதற்கு குறைந்த அளவே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓவல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது.