இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.! ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.! ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்!


india-vs-australia-cricket-match-update-in-tamil

தொடர் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இலங்கை அணியை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த 17 ஆம் தேதி அறிவித்தது. இதில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய 7 வீரர்களை தூக்கிவிட்டு புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ind vs aus

உலக கோப்பை அணியில் இருந்த உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் குல்ட்டர்நைல், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகிய 7 வீரர்களும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து சீன் அப்பாட்டும் தேவையில்லை என்பதால், அவர் நீக்கப்பட்டு ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். பல புது வியூகங்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் போட்டியில் சந்திக்கிறது.