"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
தொடரும் மழை! அடுத்த அப்டேட் குறித்து ஐசிசி தகவல்!
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை, பாகிஸ்தான்- இலங்கை, வங்காள தேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது.
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்களில் மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது நடப்பு உலகக் கோப்பை போட்டியில்தான்.
அதேபோல் இன்று பலம் வாய்ந்த இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
அதை போலவே நாட்டிங்காமில் மீண்டும் கன மழை பெய்ய துவங்கியுள்ளளது. இதன் காரணமாக திறக்கப்பட்ட பிட்ச் மீண்டும் மூடப்பட்டுவிட்டது. மழை நின்றால் தான் அடுத்த அறிவிப்பு வெளியாகும்.
சர்வதேச ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி இன்று நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆனல் நாட்டிங்காம் மைதானத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இரு அணிகளின் பயிற்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.அதே போல் நியூசிலாந்து அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இன்று இரு அணிகள் மோதும் போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஆனால், வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட தகவல் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், நாட்டிங்காமில் இன்று 90 சதவிதம் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஐசிசி நிறுவனம் தொடர்ந்து தகவல்களை தந்து கொண்டிருக்கிறது.
அதன் படி தற்போது வந்த தகவல் என்னவெனில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அடுத்த ஆய்வு இங்கிலாந்து நேரப்படி 12:30 மணிக்கும் இந்திய நேரப்படி 5:30 மணிக்கும் வெளியிடப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.