மச்சான்களை ஏமாற்றாத இந்திய மருமகன் சோயிப் மாலிக். வைரலாகும் வீடியோ உள்ளே

india marumakan shoip malik paistan


india marumakan shoip malik paistan

ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைக்கான தொடர் தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர்4  சுற்றுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் மீண்டும்  இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று விளையாடியது. இந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எல்லைக்கோட்டின் அருகில் நின்று பீல்டிங் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை இந்திய ரசிகர்கள் ஜீஜூ ஜீஜூ என்று அழைத்தனர் 
உடனே ரசிகர்களை பார்த்து கை அசைத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

ஜீஜூ என்றால் சகோதரியின் கணவர் என்பது பொருள்படும். சோயிப் மாலிக் 
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை  திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.