விளையாட்டு

கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வி..! வெளியான புள்ளி விவரம்..!

Summary:

India Last 7 Odis in SENA Countries Without Rohit Sharma

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவதாக நடந்த T20 போட்டியில் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ரோஹித் சர்மா மற்றும் KL ராகுல் இருவரும் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒருநாள் நாள் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.விராட்கோலியின் மோசமான பேட்டிங், மூன்று போட்டிகளிலும் பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்காதது போன்ற பல காரணங்கள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, ரோஹித் ஷர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடிய கடைசி 7 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளதாக புள்ளி விவரத்தை  பகிர்ந்துவருகின்றனர் இந்திய அணி ரசிகர்கள்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த, கடந்த 7 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Advertisement