முதல்முறையாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி! கடைசி வரை நீடிக்குமா?

முதல்முறையாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி! கடைசி வரை நீடிக்குமா?


india first place in points table

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 326 ரன்களை தென் ஆப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்துள்ளது.

wc2019

இந்த உலகக் கோப்பை துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தான் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தன. இன்றுதான் முதல் முறையாக இந்திய அணி புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் 9 லீக் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனதாலும் இந்திய அணி 15 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

wc2019

இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை பிடித்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி பெற வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும். இன்று இந்த உலக கோப்பை தொடரிலேயே சிறப்பாக ஆடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடையும் நிலையில்தான் உள்ளது. அவ்வாறு ஆஸ்திரேலிய அணி தோல்வி பெற்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலேயே நீடித்து இருக்கும்.

wc2019