விளையாட்டு

தோல்வியை தொடர்ந்து இந்திய அணிக்கு காத்திருந்த மேலும் ஒரு அதிர்ச்சி..! இது மூன்றாவது முறை..!

Summary:

India fined 80 percent by ICC for slow bowling

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டியை அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து வெற்றிபெற்றது.

இந்திய அணி தோல்வியை சந்தித்ததோடு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 80 சதவீதம் அபராதம் விதிப்பதாக ICC தெரிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தத் தவறை ஒப்புக்கொண்டதால் இதுகுறித்து முறையான விசாரணை நடத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு அபராதம் விதிப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே நடந்த 4 வது T20 போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 40 % அபராதமும், 5 வது போட்டியிலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 20 % அபராதமும் விதிக்கப்பட்டநிலையில் தற்போது மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement