இந்தியா விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை உச்ச நீதிமன்றம் கேள்வி?

Summary:

india cricket player srisanth - bcci - suprem court

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடை குறித்து பிசிசிஐயின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் பின்னர் ஊழல் புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ-ஆல் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில் ஊழல் புகாரில் இருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டார். ஆனால் பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்க மறுத்தது.

இதனை எதிர்த்து ஸ்ரீசாந்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீசாந்த் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டும் அவர் மீதான வாழ்நாள் தடையை ஏன் நீக்கவில்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும் மேலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது.


Advertisement