வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து; மானத்தை காத்த இந்திய பௌலர்கள்; 31 ஓவரில் இந்தியா அவுட்

வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து; மானத்தை காத்த இந்திய பௌலர்கள்; 31 ஓவரில் இந்தியா அவுட்



india all out for 92 runs

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று கைப்பற்றியுள்ளது இந்தியா. அடுத்த 2 போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். எனவே இந்த போட்டியில் கோலியின் இடத்தை நிரப்ப அறிமுக வீரர் சுபம் கில் களமிறக்கப்பட்டுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா 13 மற்றும் 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து சுபம் கில் 9 ரன்னிலும் ஜாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

cricket

அதன்பின்னர் அணியின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும் பொழுது புவனேஷ் குமாரும் 55 ஆக இருக்கும்போது ஹர்டிக் பாண்டியாவும் ஆட்டமிழந்தனர். அடுத்து 9 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் சாகல்  சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினார். அணியின் எண்ணிக்கை 80 தொட்டபோது குலதீப் யாதவ் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கலீல் அஹ்மத் 5 ரன்னில் ஆட்டம் இழக்க இந்திய அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.

40 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 50 ரன்கள் எடுப்பதே சிரமம் என்று எண்ணிய நிலையில் குலதீப் மற்றும் சாகல் நிலைத்து நின்று ஆடியதால் 92 ரன்கள் எடுக்க முடிந்தது. இந்திய அணியில் சாகல் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.