500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்; ரசிகர்களே கொண்டாடுங்கள்.!

500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்; ரசிகர்களே கொண்டாடுங்கள்.!


IND Vs ENG R Ashwin 500 Wickets in Test Series 

 

இந்தியா -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பெற்று ஆட்டத்தை சமன் செய்துள்ளது. 

மூன்றாவது ஆட்டத்தின் இரண்டாவது நாள் முடிவில், இந்திய அணி 130 ஓவர்கள் முடிவில் 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 35 ஓவரில் 207 ரன்கள் குவித்துள்ளது. 2 விக்கெட் இழந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும். 

இந்நிலையில், இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவர் தனது 500 வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜாக் 28 வது பந்தில் கேட்ச் அவுட்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்து அஸ்வினின் சாதனைக்கு காரணமாகினார். 

இதன் வாயிலாக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறார். உலகளவில் 9 வது இடத்தில் இருக்கிறார். அணில் கும்பலே 600 விக்கெட்டுகளை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.